ராணிப்பேட்டை, அக்.22.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே ஜீவா (36) என்ற இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையோரம் கிடந்த அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ஜீவா மீது ஏற்கெனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலைக்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



