திருச்சி, ஜூன் 11 –
திருச்சி மாவட்டம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்பனூர் பகுதியில் குளத்தில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் வேங்கையன், கிருஷ்ணமூர்த்தி, நந்தகுமார் ஆகிய மூவர் அனுமதியின்றி மணல் அள்ளிய குற்றத்திற்காககைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் ஒரு ஜேசிபி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.



