சென்னை, பிப். 24 –
வீரபத்திர் ராஜகுல பேரவை சார்பாக வண்ணார் குல 5% உள் ஒதுக்கீடு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜஸ்தான் விளையாட்டு அரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரவைத் தலைவர் பொறியாளர் வசந்தன் தலைமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வண்ணார் குல சமூகத்தினருக்கு 5% உள்ஒதுக்கீடு மற்றும் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கும் வண்ணார் சமூகத்திற்கு பொருளாதாரத்திலும், வேலை வாய்ப்பிலும் பலன்கள் சென்றடைவதில்லை. 80 இலட்சம் பேருக்கும் அதிகமாக உள்ள எங்கள் சமூகத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்க கோரியும், அரசு பதிவேட்டில் உள்ள வண்ணார் என்ற பதத்தை நீக்கி ராஜகுலத்தோர் என்று சட்டம் இயற்றி அரசு பதிவேட்டில் வெளியிட கோரியும், எங்கள் சமூகத்திற்கு என்று சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்றங்களில் அரசியல் பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. இதில் எங்களுக்கு தனித் தொகுதிகள் வழங்க வேண்டும்.
வண்ணார் சமூகத்திற்கு சொந்தமான நிலங்கள் கோயில்கள் மடங்கள் போன்ற ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி உள்ள இடங்களை மீட்டு எங்கள் சமூகத்திற்கு ஒப்படைத்த ஆவண செய்ய கோரியும் சமூகத்தை மேம்படுத்த தனி நல வாரியம் ஒன்றினை அமைத்து அமைக்க வேண்டிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த ஆர்பாட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் மேனாகுமார், பொருளாளர் கே.எஸ்.சுப்புராஜ், தென் சென்னை மாவட்ட செயலாளர் தண்டபாணி, அரியலூர் மாவட்டச் செயலாளர் அண்ணாதுரை, செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் தங்கராஜ், கடலூர் மாவட்டச் செயலாளர் பழனி, மகளிரணியின் உஷா, மஞ்சு மற்றும் பஞ்சாட்சரம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.



