By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரம் விதை விற்பனை நிலையங்களில் 31 டன் விதை விற்பனைக்கு தடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரம் விதை விற்பனை நிலையங்களில் 31 டன் விதை விற்பனைக்கு தடை
இராமநாதபுரம்

ராமநாதபுரம் விதை விற்பனை நிலையங்களில் 31 டன் விதை விற்பனைக்கு தடை

Last updated: September 4, 2025 6:35 pm
September 4, 2025
40 Views
Share
SHARE

பரமக்குடி, செப். 4 –

ராமநாதபுரம் விதை ஆய்வு துணை இயக்குநர் இப்ராம்சா ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வாளர் ஜெயந்தி மாலாவுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்ட அறிக்கையாவது: விதை விற்பனை நிலையங்களில் விதைகள் பெறப்பட்டவுடன் விதை மாதிரிகளை எடுத்து விதைப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி முளைப்புத்திறனை அறிந்து கொள்ள வேண்டும். இதில் அதிக முளைப்புத்திறன் உள்ள விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். விதை உற்பத்தியாளர் அல்லது விநியோகஸ்தரிடம் இருந்து தனியார் விற்பனை நிலையங்களில் விதைகள் பெறப்பட்டவுடன் கடைகளில் முறைப்படி மரச்சட்டங்களில் மீது வைத்து ஈரப்பதம் பாதிக்காமல், உரம் மற்றும் பூச்சிகொல்லிகளுடன் சேர்க்காமல் தனியாக இருப்பு வைத்திட வேண்டும். மேலும் பொது சுத்தம் பேண வேண்டும். சரியான சேமிப்பு முறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.

விதை விற்பனை நிலையங்களில் விற்பனை உரிமம், இருப்பு பதிவேடு, விலைப்பட்டியல், முளைப்புத்திறன் அறிக்கை, பதிவுச்சான்று, விற்பனை ரசீது புக் ஆகியவைகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகின்றதா என்று ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மேற்கூறிய ஆவணங்கள் விற்பனை நிறுவனத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்விற்கு வரும்பொழுது உடன் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும். விதை வாங்கும் விவசாயிகளுக்கு விற்பனை ரசீது கட்டாயம் வழங்குவதுடன் அதில் விவசாயின் பெயர், முகவரி, விதையின் நிலை, குவியல் எண், காலாவதி நாள் ஆகியவைகள் இடம்பெற்றிருக்க வேண்டும். விற்பனை நிலையங்களில் விதை மாதிரிகள் 33 எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு விதைப்பரிசோதனை நிலையம் பரமக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேற்காணும் நடைமுறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது விதைச் சட்டப்பிரிவுகளின்படி விற்பனை தடை, உரிமம் இடை நிறுத்தி வைப்பு, உரிமம் ரத்து மற்றும் நீதிமன்றம் மூலம் தண்டனை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரித்துள்ளார். தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது சரியான ஆவணங்கள் இல்லாத 5 நிறுவனங்களில் 31 டன் விதை ரூ.10 லட்சம் மதிப்புள்ளவைக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டது மற்றும் 4 எண்ணிக்கை விதைச்சட்டங்களை கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு விளக்கும் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கருத்துரை
ரூ.6.25 கோடி மதிப்பில் பெரியார் சமத்துவபுரம் கட்டுமான பணி
எடப்பாடியார் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய திமுக மீது எஸ்.பி. யிடம் புகார்
76 வது குடியரசு தின விழா
நிவாரணம் கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரையில் மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டி; புதிய சாதனை படைத்த வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு மழை

August 11, 2025
52 Views
மேடவாக்கத்தில்அதிமுக பொதுச் செயலாளரும்
நாகர்கோவில் கோட்டாறு ரயில் நிலையம் அருகே ஒரு கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பள்ளியில் படித்த நண்பர்கள்
அரசை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account