போகலூர், ஆக. 15 –
ராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சமாதான புறாக்களை பறக்க விட்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 75 காவல்துறை அலுவலர்கள், பல்வேறு அரசுத்துறையினர் சார்ந்த 229 அலுவலர்கள் என மொத்தம் 304 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் இரண்டு பயனாளிகளுக்கு ரூபாய் இரண்டு லட்சத்தி 3 ஆயிரத்து அறநூறு மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனங்களையும், முன்னாள் படை வீரர் நலத்துறையின் மூலம் இரண்டு பயனாளிகளுக்கு ரூபாய் 50,000 மதிப்பீட்டில் கல்வி உதவி தொகைக்கான காசோலைகளையும் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் 12 பயனாளிகளுக்கு ரூபாய் 42 லட்சம் மதிப்பீட்டில் திருநங்கைகளுக்கான கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பணி ஆணைகளையும், கூட்டுறவு துறையின் மூலம் 36 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 36 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகளையும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் ரூபாய் 60 ஆயிரத்து 760 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு விலை இல்லா தையல் இயந்திரங்களையும் ஐந்து பயனாளிகளுக்கு விலை இல்லா சலவை பெட்டிகளையும் வேளாண்மை துறையின் மூலம் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்ற ஆறு பயனாளிகளுக்கு 65 ஆயிரத்திற்கான பரிசுத் தொகையினையும் தோட்டக்கலைத் துறையின் மூலம் இரண்டு பயனாளிகளுக்கு காய்கறி பல செடிகளையும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் மூன்று பயனாளிகளுக்கு ரூபாய் 19794 மதிப்பில் விலை இல்லா தையல் இயந்திரம் மற்றும் விலையில்லா சலவைப் பெட்டிகளையும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் இரண்டு பயனாளிகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது மற்றும் 2 லட்சம் பரிசு தொகைக்கான காசோலைகளையும் தமிழ்நாடு நகர் புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் ஐந்து சிறந்த வங்கியாளர்களுக்கான பரிசுத்தொகை ரூபாய் 30,000 மற்றும் கேடயம் நற்சான்றிதழ் என மொத்தம் 80 பயனாளிகளுக்கு ரூபாய் 84 லட்சத்து 29 ஆயிரத்து 154 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, திரைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, சத்திரக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி, உலையூர் ஹமிதா மகளிர் மேல்நிலைப்பள்ளி, கிழக்கரை முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இராமநாதபுரம் வின்னர்ஸ் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, ஆர் எஸ் மங்கலம் தேசிய மாணவர் படை நாட்டு நலப்பணித்திட்டம், இளம் செஞ்சிலுவை சங்கம், சாரணா சாரணியர் இயக்கம் என மொத்தம் 1227 மாணவ மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



