திருப்பூர், அக் : 14
இசெட்3 ஸ்போர்ட்ஸ் சார்பில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறையின் டி20 கிரிக்கெட் போட்டி திருப்பூரில் நடைபெற்றது.
சென்னை சிட்டி, தாம்பரம் சிட்டி, தஞ்சாவூர் மற்றும் மேற்கு மண்டலம் ஆகிய நான்கு காவல்துறை அணிகள் பங்கேற்றன. சிறப்பு விருந்தினர் சந்திரன் போட்டியைத் தொடங்கி வைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
போட்டியின் முடிவில் தாம்பரம் சிட்டி போலீஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்குக் கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.



