தருமபுரி, ஆகஸ்ட் 22 –
தருமபுரி மாவட்டம் புலிக்கரை ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் சதிஷ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து முகாமினை பார்வையிட்டனர். இந்த முகாமில் அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
இதில் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப உறுப்பினர் அட்டை, ஆதார் திருத்தம், இலவச வீட்டுமனை, இலவச வீடு உள்ளிட்ட கோரிக்கைகள் வேண்டி 800 க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் மனு அளித்தனர். முகாமில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் 70 பயனாளிகளின் மனுக்களை ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.



