கிருஷ்ணகிரி, ஜுலை 1 –
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் தெற்கு ஒன்றியம் ஜெக தேவி கிராமத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
திமுகவில் இணைந்தவர்களுக்கு தே. மதியழகன் எம்எல்ஏ பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே. கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி. நாகராஜ், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் தனசேகரன், திமுக ஞானவேல், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் என். விக்னேஷ் உள்பட பல உடன் இருந்தனர்.