திருவெண்ணெய்நல்லூர், ஆகஸ்ட் 7 –
திருவெண்ணெய்நல்லூர் நகர திமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. விழுப்பரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் நகர திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ ஆணைக்கிணங்க விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன். கௌதம சிகாமணி அறிவுறுத்தலின் பேரில் நகர செயலாளர் பூக்கடை கணேசன் வழிகாட்டுதலின்படி கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அணைக்கட்டு சாலை தனியார் திருமண மண்டபம் எதிரில் உள்ள கலைஞரின் திருவுருவ சிலைக்கு பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மதியம் கலைஞர் சிலை முன்பு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் செந்தில் முருகன், ஜோதி, சையத் நாசர், ராஜாராம், ராஜ்குமார், ஷாஜகான், சதாம் காதர் உசேன், பாக்யராஜ், ரகு, வெற்றிவேல் செழியன், ரமேஷ், சுரேஷ், சிறுவா.மணி, அய்யனார், சக்திவேல், செல்வம், விஜய் உள்ளிட்ட திமுக நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.