திருப்பத்தூர், ஆக:1,
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டாரத்திற்குட்பட்ட தும்பேரி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் மதனஞ்சேரி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பயனாளிக்கு ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு தனி நபருக்கான அடையாள அட்டை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ. வில்வநாதன் வழங்கினார்கள்.
உடன் ஆலங்காயம் ஒன்றிய குழுத்தலைவர் சங்கீதா பாரி, ஒன்றிய குழு துணைத்தலைவர் பிரியதர்ஷினி ஞானவேல், மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் சாவித்திரி மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரவேல், மகராசி, ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வி நாகபூஷன் (வெலத்திகமணிபெண்டா), செல்வம் (மதனஞ்சேரி), உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.