தருமபுரி, செப்டம்பர் 08 –
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள தொப்பையாறு அணையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் தருமபுரி மாவட்ட அளவிலான எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மீட்பு நடவடிக்கைகள் குறித்த போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் சதீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.
தருமபுரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையிலான தீயணைப்புத்துறை குழுவினர் மீட்பு பணிகளைப் குறித்த போலி ஒத்திகையை நடத்தினர். தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் நடத்திய போலி ஒத்திகையில் நீரில் ஒருவர் தத்தளித்துக் கொண்டிருந்தால் அவரை எவ்வாறு மீட்டுவது அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த மாதிரியான உபகரணங்களை பயன்படுத்துவது குறித்தும், இந்த பயிற்சியில் வெள்ளத்தில் சீக்கியர்களை மோட்டார் போட், லைபாய், லைஜாக்கெட் உதவியுடன் மீட்பது குறித்தும், வெள்ளத்தில் சிக்கிய விலங்குகளை நவீன மீட்புகளை பயன்படுத்தி மீட்பது குறித்தும், ரெஸ்கியு டியுப், ரெஸ்கியு துரோபேக் மூலம் மீட்பது குறித்தும் மற்றும் மீட்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் இதுபோன்று பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை குறித்து தத்துரூபமாக செய்து காட்டிய தீயணைப்புத் துறையினரை மாவட்ட ஆட்சியர் பாராட்டினர்.
மேலும் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வதற்கான பல்வேறு நவீன உபகரணங்கள் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைத்துள்ளனர். தீயணைப்புத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் சமூக பொறுப்புணர்வு சிஎஸ்ஆர் நிதியில் இருந்து கூடுதலாக நீரில் மூழ்கிக் கொண்டு தேடுவதற்கான ஸ்கூபா டைவிங் உபகரணத்தை வழங்கி உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர்கள், காவல்துறையினர், மருத்துவ குழுவினர், கால்நடை துறையினர் கலந்து கொண்டனர்.



