தருமபுரி, செப்டம்பர் 03 –
தருமபுரியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கலந்து கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் வருகிற ஏழாம் தேதி நெல்லையில் வாக்கு திருட்டை கண்டித்து மாபெரும் கண்டன மாநாடு நடைபெறுகிறது. இதில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்காக தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நாங்கள் எல்லோரும் ஆயத்த கூட்டத்தை நடத்தி வருகிறோம்.
கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ் – திமுக கூட்டணியில் இருந்து வருகிறது. இந்திய கூட்டணியின் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார். இது வெற்றி கூட்டணி, கொள்கை கூட்டணி. இதனால் எல்லா தேர்தல்களிலும் மாபெரும் வெற்றி பெற்று வரும் கூட்டணி இது. ராகுல் காந்தியை பிரதமராக்க இருக்கும் கூட்டணி. ராகுல் காந்தியின் செயல்பாட்டை வரவேற்று தமிழ்நாடு முதலமைச்சர் பீகார் வரை சென்று இந்தியாவுக்கே வழிகாட்டியாக ஒரு வழக்கறிஞராக ராகுல் காந்தி செயல்படுகிறார் என்று பாராட்டி உள்ளார்.
இந்தியாவில் மக்கள் விரோத, ஜனநாயக விரோத மோடி தலைமையிலான ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக இந்த வாக்குத்திருட்டின் மூலம் பல்வேறு இடங்களில் பாஜகவினர் ஆட்சி அமைத்துள்ளனர். இந்த உண்மையை மக்களிடம் ராகுல் சொல்வதால் அவர் மீது வன்மத்தை காட்டுகிறார்கள். இதற்கு ஒரு போதும் ராகுல் பயப்படமாட்டார். தைரியமாக காந்திய வழியில் எதிர்கொள்வார். இந்த உண்மையை மக்களிடம் எடுத்துக்காட்டி அதன்மூலம் மக்களாட்சியில் மாற்றம் காண்பது என்று முடிவெடுத்து செயல்பட்டு வருகிறார்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஸ்டாலின் தலைமையில் ஏற்பட்டவுடன் 9.6 விழுக்காடு வளர்ச்சி பெற்று உள்ளது. அதேபோல் பல்வேறு துறைகளில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்பதை மத்திய அரசின் புள்ளி விவரங்களை சொல்கிறது. இவையெல்லாம் இந்த ஆட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும் பலம் சேர்க்கிறது. வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் முதலமைச்சர் நடத்தும் இந்த கூட்டங்களால் பல்லாயிரம் கோடி தமிழ்நாட்டிற்கு முதலீடாக வந்திருக்கிறது. தற்போது சென்றுள்ள ஜெர்மன் நாட்டு பயணத்தின் மூலம் 3,500 கோடி ரூபாய் முதலீடு வந்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இது போன்ற பயணங்களை முதலமைச்சர் என்ற அடிப்படையில் அவர் மேற்கொள்ள வேண்டும் அதற்கு வாழ்த்துக்கள்.
இரட்டை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது காங்கிரஸ் கட்சியின் பவுன் கேரேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இருக்கா என்பதை அவர்தான் தெரிவிக்க வேண்டும். உரிய இடத்தில் உரிய நேரத்தில் அதை பவன் கேரே காட்டுவார். ராகுல் காந்தி யார் மீதும் வன்மத்தை காட்டமாட்டார். மாறாக அன்பு தான் காட்டுவோம். அன்பு மூலமாகத்தான் எல்லோரையும் அரவனைப்போம். பீகாரில் பேசியவர் பாஜகவை சார்ந்தவர். காங்கிரஸ் போர்வையில் அறிக்கை கொடுத்திருக்கிறார். அதை நாங்கள் வெளிப்படையாக காட்டி இருக்கிறோம் என தெரிவித்தார்.



