By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்

Last updated: July 1, 2025 5:46 pm
July 1, 2025
41 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 1 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தினார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2-ம் காலாண்டுக்கான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், ஆதிதிராவிடர் நல குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புலன் விசாரணையில் உள்ள வழக்குகள், கோட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள், தீர்வு காணப்பட்ட வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீருதவிக்தொகைகளை பெற்று தருதல் உள்ளிட்டவைகள் குறித்தும், மக்களிடையே வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்தும் மாவட்ட கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம், தாட்கோ மூலம் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிகள், பெண் கல்வி ஊக்கத்தொகை, அயோத்தி தாஸ் பண்டிதர் மேம்பாட்டு குடியிருப்பு திட்டம், ஆதி திராவிடர் குடியிருப்புகளின் அடிப்படை வசதிகள், இலவச வீட்டு மனை பட்டா, சாதி வேறுபாடற்ற மயானம், வன்கொடுமை தீருதவி போன்ற பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் போலீசார் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளுக்குச் சென்று மாணவர் மாணவிகளிடையே கலந்துரையாடி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என கூறப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் சப் கலெக்டர் ஹிருத்யா விஜயன், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, அனைத்து துணை போலீஸ் கண்காணிப்பாளர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், அனைத்து ஆதி திராவிடர் நல தனி தாசில்தார்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் பேருந்து நிழற்குடை திறப்பு விழா, இலவச மருத்துவ முகாம்
அமித்ஷாவை கண்டித்துஆர்ப்பாட்டம்
பள்ளி மாணவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை
2023- 24 ஆம் ஆண்டில் 198 இரத்த தான முகாம்
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 2.5 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் – மாநகராட்சி மேயர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கண்டன் சாஸ்தா திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா

August 26, 2024
99 Views
75 வது இந்திய அரசமைப்பு தினத்தினை முன்னிட்டு
விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மாதந்திர சாதாரண மாமன்ற கூட்டம்
விளையாட்டு மைதானத்தில் மராத்தான் விளையாட்டு போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account