தக்கலை, ஆக. 8 –
தக்கலை அடுத்த குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுதா (36). தக்கலை நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். ஐயப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு ஈடுபட்டு வருவார்.
மேலும் மனைவியின் தந்தை வீட்டு சொத்தை எழுதி வாங்கி வருமாறு கேட்டு ஐயப்பன் அடிக்கடி துன்புறுத்தி வந்தாராம். இது தொடர்பாக மனைவி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் ஐயப்பனை பிடித்து விசாரித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் சொத்தை எழுதி வாங்கி வருமாறு மனைவி சுதாவிடம் ஐயப்பன் தகராறு செய்தார். மேலும் ஆத்திரமடைந்த ஐயப்பன் மனைவியிடம் தகாத வார்த்தைகளால் திட்டி செங்கல்லை எடுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதில் படுகாயம் அடைந்த சுதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை தாக்கி மிரட்டிய ஐயப்பன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.