தக்கலை, ஜூலை.22-
தக்கலை ஒன்றிய தேமுதிக இளைஞரணி துணைத் தலைவர் மகேஷ் ஏற்பாட்டின் கீழ் அக்கட்சியின் நிர்வாகிகள் சுமார் 50 பேர் விலவூர் பேரூர் அதிமுக செயலாளர் புருஸ்சி கோபால் முன்னிலையில் அதிமுகவில் இணந்தனர். அவர்களை குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜெய சுதர்சன் மற்றும் மாவட்ட பொறுப்பாளரும் மாநில அமைப்பு செயலாளருமான சின்னத்துரை ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
தொடர்ந்து ஊராட்சிகளிலும் பூத் கமிட்டிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அணி செயலாளர்கள் மனோ, சக்கீர் உசேன், ஜான், கிளாடிஸ் லில்லி, ரஞ்சித்குமார் ஒன்றிய செயலாளர்கள் நிமால், ஜார்ஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.