ஈரோடு | செப். 21
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையாவுக்கு, மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு பெரியார் மன்றத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கலந்து கொண்டு, சாலமன் பாப்பையாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சண்முகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னரசு, ஆர்.எம். பழனிசாமி, விடியல் சேகர், மேயர் நாகரத்தினம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் முத்துசாமி அனுப்பியிருந்த இரங்கல் உரையும் நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டது.



