மதுரை, ஜூன் 30 –
மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு அனைத்து மாணவர்களும் திலகர் திடல் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் அ. தங்கமணி முன்னிலையில் போதை எதிர்ப்பு உறுதி மொழி எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆய்வாளர் போதைப் பொருட்களின் தீய விளைவுகள் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்து உரையாற்றினார். அதன் பின்னர் மாணவர்களின் போதை எதிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி சேதுபதி பள்ளியில் இருந்து தொடங்கி மதுரை ரயில் நிலையம் சந்திப்பு வரை சென்று பின்னர் பள்ளியில் வந்து நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திலகர் திடல் காவல் ஆய்வாளர் அழகர், உதவி ஆய்வாளர்கள் பரமேஸ்வரி, பாண்டியராஜன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர் பெருமக்கள் உட்பட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.