By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கடும் நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கடும் நடவடிக்கை
கிருஷ்ணகிரி

சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கடும் நடவடிக்கை

Last updated: August 11, 2025 10:59 am
August 11, 2025
22 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 11 –

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக மாவட்ட காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மாநில மற்றும் மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் 24×7 நேரமும் சுழற்சி அடிப்படையில் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தொடர்ச்சியான சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகளின் விளைவாக 01.01.2025 முதல் தற்போது வரை மொத்தம் 167 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், எதிரிகளிடமிருந்து சுமார் 175 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் கடத்தலில் ஈடுப்பட்ட 4 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 8 இருசக்கர வாகனங்கள் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 772 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 769 பேர் கைது செய்யப்பட்டு சுமார் 14,200 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் தொடர்புடைய 45 நான்கு சக்கர வாகனங்கள், 14 இருசக்கர வாகனங்கள் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் பொருட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான 2,657 இடங்களில் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவ்வாண்டில் 7,525 லிட்டர் எரிச்சாராயமும் 3013 லிட்டர் வெளிமாநில மது பானங்கள் கைப்பற்றப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மது பானங்களை விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமாக 2882 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2926 எதிரிகள் கைது செய்யப்பட்டு சுமார் 16,193 லிட்டர் அளவிலான மது பானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் தொடர்புடைய 17 நான்கு சக்கர வாகனங்கள், 40 இருசக்கர வாகனங்கள் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 2 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, கள்ளதனமாக அரசு மதுபானம், கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரிய வந்தால் 24 மணி நேரமும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை எண்.9498181214 என்ற தொலைபேசி எண் மூலமாக அல்லது Whatsapp மூலமாக தகவல் தெரிவிக்கலாம். கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை சம்மந்தமான புகார் தெரிவிக்க இலவச அழைப்பு எண் 10581 மூலமாக தகவல் தெரிவிக்கலாம். மேற்படி சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியில் பெரியார் 146-வது பிறந்த நாளையொட்டி
அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் போதை விழிப்புணர்வு பேரணி
இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றபயனாளிகள்
1782 போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், காட்டிநாயக்கனப்பள்ளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கழிவு நீர் ஓடையில் தவறி விழுந்த முதியவர்

December 10, 2024
117 Views
ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை
மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை மரணம் குறித்து ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
கல்லாவி விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account