கோவை, அக் : 12
கோவை மாவட்டம், பேரூர் அருகே உள்ள பச்சாபாளையத்தில், ஸ்ரீ ராமசாமி கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை மற்றும் எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் சார்பில் மகளிர் வாழ்வாதாரத் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
டாக்டர் மகேஸ்வரி சிவபிரகாசம் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். தையல், ஆரி வேலைப்பாடு, டிசைனிங் மற்றும் அழகுக்கலை உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும், சுமார் 30 நிமிடங்களில் பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய நிகழ்வுக்கு இன்டர்நேஷனல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் க்ரோனிக்கல் அமைப்பு சார்பில் அங்கீகாரமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பெண்கள் சுயதொழில் தொடங்கி பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த ஆலோசனைகளும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.



