கோவை, செப். 15 –
கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சி வீரபாண்டிப் பிரிவில் தந்தைப் பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது திருவுருவப்படம் திறப்பு விழா திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச் செயலாளர் காசு. நாகராசன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கூடலூர் நகராட்சித் தலைவர் மற்றும் நகரக் கழக செயலாளர் அ. அறிவரசு கலந்து கொண்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் மற்றும் அண்ணா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அவர்களது புகழை போற்றி உரையாற்றினார். அருகில் கோவை மாவட்ட திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிர்வாகிகள் கோபிநாத், தம்பராஜ், சம்பத் சிவராஜ், முருகராஜ், ஹரி, வீரபாண்டி திமுக பேரூர் கழக செயலாளர் சுரேஷ் மற்றும் பேரவை நிர்வாகிகள், கூடலூர் திமுகவினர் என பலரும் கலந்து கொண்டு நடைபெற்றது.



