ஈரோடு , அக் : 14
ஈரோடு மாவட்டம், பெருந்துறை கொங்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் மாநிலங்களுக்கு இடையேயான யோகாசனப் போட்டி நடைபெற்றது. இதில் 450 பள்ளி மாணவர்கள், 200 கல்லூரி மாணவர்கள் என மொத்தம் 650 பேர் பங்கேற்றனர்.
கோமுகேஸ்வரா யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், கொங்கு இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் பாரதி யோகா மற்றும் உடற்பயிற்சி மையம் இணைந்து இப்போட்டியை நடத்தின. டாக்டர் பிரதாப் சிங், டாக்டர் ஸ்ரீகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கவுதம் செல்வராஜ், டாக்டர் பிரணவ் மற்றும் இளவரசன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.



