கோவை, அக். 06 –
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் பிங்க் வண்ண நிகழ்ச்சியுடன் கையெழுத்து இயக்க நிகழ்ச்சி கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி மற்றும் கேஎம்சிஹெச் மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி துவக்கி வைத்த இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் IPS, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் IPS ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கேஎம்சிஹெச் மார்பக சிகிச்சை மையத்தின் முதன்மை ஆலோசகர் டாக்டர் ரூபா இதில் கலந்துகொண்டார்.
கேஎம்சிஹெச் மார்பக சிகிச்சை மையமானது அனைத்து வித சிகிச்சைகளையும் ஒரே கூரையின் கீழ் அளிக்கும் ஒரு முழுமையான சிகிச்சை மையமாக 2013-ம் ஆண்டுமுதல் செயல்பட்டு வருகிறது. சிறந்த நிபுணர்கள், அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப உதவியுடன் நோயாளிகளுக்கு ஆலோசனை, பரிசோதனை, சிகிச்சை ஆகிய அனைத்தும் உள்ளடக்கிய மருத்துவ சேவைகளை உலகத்தரத்துக்கு நிகராக வழங்கி வருகிறது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படும் வேளையில் கேஎம்சிஹெச் மார்பக சிகிச்சை மையம் தனது 12-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.



