By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல், பத்மநாபபுரம் தொகுதி பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல், பத்மநாபபுரம் தொகுதி பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சல், பத்மநாபபுரம் தொகுதி பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர் ஆய்வு

Last updated: March 25, 2026 2:47 pm
March 25, 2026
22 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 25 –

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23 அன்று பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை இன்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 15 வாக்கு சாவடிகளும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 23 வாக்குச்சாவடிகளும் பதற்றமான மற்றும் கவனிக்கத்தக்க வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் சம்மந்தபட்ட வாக்குச்சாவடிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குளச்சல் சட்டன்ற தொகுதிக்குட்பட்ட குறும்பனை அருகில் உள்ள சரவிளை அரசு நடுநிலைப்பள்ளி, குளச்சல் நகராட்சிக்குட்பட்ட இலப்பவிளை அரசு உயர்நிலைப்பள்ளி, மாடத்திட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவிதாங்கோடு அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி, மணலிக்கரை புனித ஜோசப் தொடக்கப்பள்ளி, தக்கலை அரசு தொடக்கப்பள்ளி ஆகிய பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் திருவிதாங்கோடு அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கபடவுள்ள மாதிரி வாக்குச்சாவடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அமைதியான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவலர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்படுவார்கள். பதட்டமான அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா வசதிகள் ஏற்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.

அதனடிப்படையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எந்தவொரு அச்சுறுத்தலுமின்றி வாக்களிப்பதை தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ள அலுவலர்கள், காவலர்கள் உள்ளிட்டவர்கள் உறுதி செய்திட வேண்டும் என கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கோமதி, காவல்துறையினர், தலைமையாசிரியர்கள், துறை அலுவலர்கள், காவல்துறையினர் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

சுவாமிதோப்பு காமராஜ் வித்யாலயாவில் கல்வி வளர்ச்சி நாள் விழா
சென்னையில் “பசுமையான எதிர்காலம்” எஸ்பிஐ-ன் கிரீன் மாரத்தான் சீசன் – 6
நித்திரவிளை யில் வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் செல்ல இடையூறு
கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

September 23, 2025
46 Views
வேலூரில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பாக விழிப்புணர்வு பேரணி
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில்
நாகை பெட்ரோலிய நிறுவனத்துடன் யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
பொது நூலகத்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் புத்தகத் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account