குளச்சல், பிப். 03 –
குளச்சல் நகர அதிமுக சார்பில் அண்ணாவின் 57-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இன் நிகழ்வில் அண்ணா சிலைக்கு அதிமுக நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமைப்பு சாரா ஒட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆறுமுகராஜா முன்னாள் மாணவரணி செயலாளர் ரவிந்திரவர்சன் முன்னாள் நகர கழக செயலாளர் அருள்தாஸ் நகர அவை தலைவர் சிட்டி ஷகுல் அமீது முன்னிலை வகித்தனர்.
எஸ்.எம் பிள்ளை இராஜ்குமார் வக்கீல் சந்திரசேகர்,அப்துல் நாசர், ஆன்றோ வின்சென்ட் தேவிசக்தி குமாரதாஸ் ரெஜி செர்பா சுபசந்தியா ஜெர்மி ராஜன் தர்மராஜ் முருகன் செல்வகுமார் ஜெகன் வினோத் சுபல் ரமேஷ்பாபு, சுபல், சுயம்பு,மணி, வேல்தாஸ் மலுக்முகமது நடேசன்,பிரின்ஸ் பால், பூக்கடை றாபின், மரிய விக்டோர், அபூதாயிரு, மார்க்கூஸ், மரிய லூயில், ரெபின், பிரேமஸ்,உட்பட நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.



