முதுகுளத்தூர், செப். 23 –
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. கமுதியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. அதில் மிகவும் வஞ்சிக்கத்தக்கப்படும் வார்டு 14 மற்றும் 15 வார்டு கவுன்சிலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத செயல் அலுவலர், 14 வது வார்டு வெள்ளையாபுரம் கவுன்சிலர் சத்யா ஜோதிராஜ், 15 வது வார்டு கவுன்சிலர் திருக்கம்மாள் ஆலடி ஈஸ்வரன் இரு வார்டுக்கும் 36 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதை வேறு வார்டுகளுக்கு ஆளுங்கட்சி கவுன்சிலருக்கு மாற்றப்பட்டது.
எனவே 14 மற்றும் 15 வார்டுகளில் அடிப்படை வசதியான குடிநீர் வசதி கழிப்பறை வசதி வடிகால் வசதி என எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது. ஆனால் 9 முதல் 13 ஆம் வார்டு வரை அனைத்து வசதி இருந்தும் நிதி வழங்கப்படுகிறது. ஆனால் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத இந்த இரண்டு வார்டுகளுக்கும் நிதி வழங்குவதில்லை. இதை செயல் அலுவலர் கேட்டால் பரிசளிக்கப்படும் என்று கூறுகின்றார். ஒரு மாத காலமாக இரண்டு கவுன்சிலர்களும் தங்களது கோரிக்கைகளை செயல் அலுவலரிடம் கூறி வருவதாகவும் அதனை கண்டு கொள்ளாமல் செயல் அலுவலர் அலட்சியம் காட்டி வருவதாகவும் இதனை கண்டிக்கும் விதமாக அலுவலகம் முன்பு வெள்ளையாபுரம் கிராம பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள், பாஜக தெற்கு ஒன்றிய தலைவர் வேலவன் அட்வகேட் உட்பட அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



