முதுகுளத்தூர், மே 25 –
தோட்டக்கலை உதவி இயக்குனர் அறிவுறுத்தல் பேரில் கடலாடி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சி.பாண்டியம்மாள் கூறியதாவது: மத்திய மாநில அரசுகளின் வேளாண் நலத்திட்டங்களை உடனுக்குடன் பெற விவசாயிகள் அனைவரும் விவசாய அடையாள எண் பெற்றுக் கொள்ள வேண்டும். வேளாண்துறை தோட்டக்கலைத்துறை மற்றும் பிற அரசுத் துறைகளின் மூலம் ஒதுக்கப்படும் மானியங்கள் இடுபொருட்கள் மற்றும் பி.எம். கிசான் போன்ற நிதி உதவி பெறும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்த இந்த விவசாய அடையாள எண் மிக முக்கியமானது.
இந்த விவசாய அட்டைகளின் எண் இருந்தால் மட்டுமே வருங்காலங்களில் அரசு வழங்கும் விவசாய கடன், பயிர் காப்பீட்டுத் தொகை, விதைகள், உரங்கள் போன்ற சலுகைகளை தங்கு தடையின்றி பெற முடியும், கடலாடி வட்டாரத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இதற்காக சிறப்பு முகாம்கள் கூட்டப்பட்டு வருகின்றன. அல்லது அருகிலுள்ள இசேவை மையங்களுக்கு சென்றும் எளிதாக பதிவு செய்து கொள்ளலாம். அனைத்து குரு நேரடி பட்டாதாரர் விவசாயிகளும் இந்த மாதம் 30.05.20262 விவசாய அடையாள அட்டைபதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


