சென்னை, ஜூலை 25 –
மிகை வளர்ச்சியுள்ள இதயத்தசை பாதிப்புக்கான கிளினிக் தொடங்குவதாக வடபழநி காவேரி மருத்துவமனை அறிவித்திருக்கிறது. காவேரி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் அரவிந்தன், கார்டியோ வாஸ்குலர் & தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அன்பரசு மோகன்ராஜ், முதுநிலை இதய ஊடுருவல் அறுவை சிகிச்சை வல்லுநர் பேராசிரியர் டாக்டர் பி. மனோகர் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இதய தசை பாதிப்புக்கான நோயறிதல் மற்றும் சிகிச்சை வழிமுறைகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து வழங்குவது இதன் சிறப்பம்சமாகும்.
இதயத்தசை பாதிப்பு (ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி) என்பது இதய தசைகள் வழக்கத்திற்கும் மேல் தடிமனாக ஆகின்றன. இது பெரும்பாலும் மரபணு காரணமாக ஏற்படுகிறது. இதயத் தசைகள் தடிமனாக மாற்றம் அடைவதால் இதயம் ரத்தத்தை சரியாக இயக்க முடியாமல் போகிறது. இதன் காரணமாக மார்பு வலி, மூச்சு விடுவதில் சிரமம், களைப்பு, மயக்கமடைதல் போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும். ஆரம்ப நிலையிலேயே நோயறிதல் மற்றும் சிறப்பான சிகிச்சையை மேற்கொள்வது, நீண்டகால விளைவுகளை தவிர்க்கக்கூடும். இது தொடர்பான சேவைகளின் முழு தொகுப்பையும் வழங்கக்கூடிய ஒரு சிறந்த மையமாக ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி (எச்.சி.எம்)
கிளினிக் இயங்கும்.
இங்கு மரபியல் ஆலோசனை மற்றும் இதய மரபியலில் குடும்ப உறுப்பினர்களுக்கான ஸ்கிரீனிங் நடவடிக்கைகள் வரை நோயறிதல்களிலிருந்து மேம்பட்ட எக்கோ மற்றும் எம்.ஆர்.ஐ சோதனைகள், ஹோல்டர் மூலம் தொடர்ச்சியான மின் செயல்பாடு முதல் கண்காணிப்பிலிருந்து மிக நவீன மின் இயங்கியல் ஆய்வுகள் வரை பேஸ்மேக்கர் மற்றும் ஐ.சி.டி போன்ற கருவிகள், இடைச்சுவர் தசைப்பகுதி நீக்கத்திலிருந்து இதயத்தின் ஈரிதழ் வால்வு பழுது நீக்கல் வரை முழுமையான சிகிச்சை வழிமுறைகளும், உத்திகளும் இந்த கிளினிக்கில் மேற்கொள்ளப்படும்.
நோயின் தீவிர நிலையை நோயாளி எட்டும்போது ஒரு கடுமையான சூழலில் இதய மாற்று சிகிச்சைக்கான மதிப்பாய்வு அந்நபருக்கு தேவைப்படலாம். மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து சிகிச்சை வழிமுறைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் உத்தரவாதத்தை காவேரி மருத்துவமனை வடபழனி வழங்குகிறது என்று தெரிவித்தனர்.