By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எல்நினோ பாதிப்புகளைத் தடுக்க வல்லுநர் குழு பரிந்துரை!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > எல்நினோ பாதிப்புகளைத் தடுக்க வல்லுநர் குழு பரிந்துரை!
Blogஇநஂதியாதமிழ்நாடு

எல்நினோ பாதிப்புகளைத் தடுக்க வல்லுநர் குழு பரிந்துரை!

Last updated: October 21, 2026 11:57 am
October 21, 2026
6 Views
Share
SHARE

சென்னை, அக். 21:

Contents
எல்நினோவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்நீர்நிலைகளைத் தூர்வார பரிந்துரைவிவசாயிகள் மற்றும் மின்சாரத் துறைக்கு அறிவுறுத்தல்

தமிழகத்தில் எல்நினோ தாக்கத்தால் ஏற்படக்கூடிய குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி, வெள்ளப்பெருக்கு, வெப்ப அலை மற்றும் பருவகால நோய்களை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வல்லுநர் குழு பல்வேறு பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

தமிழகத்தில் எல்நினோ பாதிப்புகளால் ஏற்படக்கூடிய மாற்றங்களைக் கணித்து, அவற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்தது. இக்குழு தனது முதல் கட்ட அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

எல்நினோவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்

எல்நினோ தாக்கத்தின் காரணமாக குடிநீர் பற்றாக்குறை, அணைகளுக்கு நீர்வரத்து குறைதல், வறட்சி, வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதிக மழைப்பொழிவால் நகர்ப்புறங்களில் வெள்ளப்பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டு கோடைக்காலத்தில் அதிக வெப்ப அலை வீசுதல், பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்படுதல், பருவகால நோய்கள் பரவுதல் மற்றும் நீர்மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தித் துறைகளில் பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீர்நிலைகளைத் தூர்வார பரிந்துரை

நீர்வளத்துறை சார்பில், தற்போதைய பருவமழைக் காலத்தில் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் குளங்களில் உள்ள மதகுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கிய நீர்வழித்தடங்களைத் தூர்வாருவதுடன், வெள்ளப்பாதிப்புகளைக் குறைப்பதற்கான நீண்டகாலத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால்களில் கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் திடக்கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்துதல், மழைநீர் சேகரிப்பை ஊக்குவித்தல் மற்றும் நீரை மறுபயன்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் மின்சாரத் துறைக்கு அறிவுறுத்தல்

வேளாண் துறையில் பருவநிலை மாற்றங்கள் குறித்த முன்னெச்சரிக்கைத் தகவல்களை விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளுக்குத் தேவையான மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மின்துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாயம் உள்ள பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள மின் நிலையங்களிலும் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். கோடைக்காலத்தில் அதிகரிக்கும் மின்சாரத் தேவையைச் சமாளிக்கும் வகையில் உரிய மின்சார மேலாண்மைத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை, பள்ளிக்கல்வித்துறை, இந்திய வானிலை ஆய்வு மையம், தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வல்லுநர் குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. எல்நினோவால் ஏற்படக்கூடிய சவால்களை முன்கூட்டியே எதிர்கொள்ளும் வகையில் இந்தப் பரிந்துரைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
புதுக்கடை அருகே நிலப் பிரச்சனை: கோர்ட் உத்தரவின் பேரில் 2 வழக்குகள் பதிவு
அருமனை அருகே கோழி கழிவுகளுடன் சென்ற வாகனம் பறிமுதல்: 2 பேர் மீது வழக்கு
தக்கலையில் போக்சோ வழக்கில் சாட்சியமளித்த நர்சிங் மாணவியை தாக்கிய தந்தை கைது
அண்ணாமலை விரைவில் கட்சி கொடி, சின்னம் அறிவிப்பார்; உள்ளாட்சி தேர்தல் நடந்தால் கண்டிப்பாக போட்டியிடுவோம்: we The leaders இயக்க நிர்வாகிகள் மதுரையில் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அலுவலக அமைச்சுப் பணியாளருக்கு எஸ் பி பாராட்டு

September 3, 2024
100 Views
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் கனமழை காரணமாக 15க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது
மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சுசீந்திரம் தாணுமாலய சுவாமிக்கு முழு வெள்ளிஅங்கி சாத்தபட்டது
அம்பேத்கர் 134வது பிறந்தநாள் மதுரை பாஜக
முப்பெரும் விழா நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account