ஈரோடு, ஜூலை 10 –
தொழிலாளர் விரோத சட்டங்கள் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக கூறி ஜாக்டோ ஜியோ சார்பில் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் விஜய் மனோகரன், சரவணன், மதியழகன், வீரா, கார்த்திக், ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார் .
இதில் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ரமாராணி தங்கவேலு பிரகாசம், நிர்வாகிகள் இளங்கோவன், ரஞ்சித் குமார், சண்முகம், தங்கராஜ், நாகராஜன் ஆகியோர் போராட்டம் பற்றி உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு நன்றி கூறினார்.