ஈரோடு, அக் :13
இந்திய மதிப்பீட்டாளர்கள் நிறுவனத்தின் (IOV) ஈரோடு கிளை சார்பில் மதிப்பீட்டாளர்கள் தின விழா மற்றும் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கிளைத் தலைவர் பொறியாளர் பால் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மூத்த மதிப்பீட்டாளர்கள் ஆர். மோகன்ராஜ், மணிகண்டன், சுந்தர்ராஜ் ஆகியோருக்குச் சிறப்புக் கௌரவம் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் கிளையின் செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் இளம் மதிப்பீட்டாளர்களுக்கு வழிகாட்டுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் கிளை நிர்வாகிகள், முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



