ஈரோடு, 18.08.2026
ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் என்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை சார்பில் யுகாந்திரா 26 என்ற பெயரில் மாநில அளவிலான டிரோன் போட்டி 2 நாட்கள் நடந்தது. வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகர் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர் யுவராஜா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜெயராமன் வரவேற்றார்.
சென்னை கருடா ஏரோஸ் பேஸ் நிறுவன பேராசிரியர் பொற்கொடி இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு தடுப்புகள் அமைக்கப்பட்ட பாதையில் விபத்து விடாமல் டிரோன் இயக்கும் அப்ஸ்டாக்கின் போட்டி குறிப்பிட்ட எடை உடைய பொருட்களை டிரோன் தூக்கி செல்லுதல், ப்ரீ ஸ்டைல் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.
ஈரோடு திருப்பூர் நாமக்கல் கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் தாங்கள் தயாரித்த டிரோன்களை கொண்டு வந்து பங்கேற்றனர். இதில் துறை தலைவர் நிஷா ஏஞ்சலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



