சென்னை, ஜூலை 2 –
இந்தியாவின் நொறுக்குத்தீனி பிராண்டான ஃபார்ம்லி , தனது “மக்கா ஷக்கா” பிராண்டிற்காக ” புதிய டிஜிட்டல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. தமிழக இளைஞர்களின் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்ட இந்த விளம்பரம், இசைஞானி இளையராஜாவின் மெகா ஹிட் பாடலின் மறுவடிவத்தோடு உயிர்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் பரபரப்பான தெருக்கள் மற்றும் மொட்டை மாடிகளில் நடப்பதாக இந்த விளம்பரம் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு இளைஞன் கடைசி ‘மக்கா ஷக்கா’ பாக்கெட்டை எடுப்பதில் தொடங்கும் இந்த வீடியோ, விறுவிறுப்பான ‘பார்கூர்’ சாகசத் துரத்தலாக மாறுகிறது. ‘மைண்ட் யுவர் லாங்குவேஜ் (எம் . ஒய்.எல்).நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆக்ஷன் காட்சிகள், தங்களுக்குப் பிடித்த நொறுக்குத்தீனிக்காக மக்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது போல் வடிவமைத்துள்ளனர்.
இந்த பிரச்சாரம் குறித்து ஃபார்ம்லி மார்க்கெட்டிங் தலைவர், அமன் குப்தா, “நுகர்வோர்கள் உள்ளூர் சுவையையும் ஆரோக்கியத்தையும் விரும்புகிறார்கள். முக்கிய சந்தையான தமிழ்நாட்டு வாடிக்கையாளர்களின் மனதிற்கு நெருக்கமாக இந்த விளம்பரம் இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இளையராஜாவின் அசல் இசையும், தெரு சாகசங்களும் இன்றைய இளைஞர்களை எளிதில் சென்றடையும்.”என்று கூறினார்.
மேலும் எம்.ஒய்.எல் நிறுவனர் தீபன் ராமச்சந்திரன் கூறுகையில் “மக்கா ஷக்கா என்பது இளமைத் துடிப்பு நிறைந்த ஒரு தனி ‘வைப்’. பிராண்ட் பெயரின் ஒலியிலிருந்தே இந்த யோசனை கிடைத்தது. ட்ரெண்டான பார்கூர் சாகசங்களையும், இளையராஜாவின் என்றும் அழியாத இசையையும் இணைத்து இந்த அற்புதமான விளம்பரத்தை உருவாக்கியுள்ளோம்.” இந்த விளம்பரம் ‘ஜென் சீ’ மற்றும் ‘மில்லினியல்’ இளைஞர்களைக் கவரும் வகையில், தயாரிப்பின் ஆரோக்கிய நன்மைகளையும் விளக்குகிறது என்றார்.



