திருவள்ளூர் | செப்.17:
பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, சத்தாயுஸ் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் இலவச சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் நடைபெற்ற முகாமை பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் கருணாகரன் தொடங்கி வைத்தார். இதில் சதீஷ், லட்சுமிகாந்தன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றனர்.



