விளாத்திகுளம், செப்.13.
தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் அவரது நினைவு அனுசரிக்கப்பட்டு வருகிறது. பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ரெகுராமபுரம் கிராமத்திலும் தவெக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவப்படம் ரெகுராமபுரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு தவெக மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சி.சி.கண்ணன் தலைமையில் பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் தவெக நிர்வாகி முனியசாமி, கட்சி தொண்டர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரது சமூகப் பணிகள் மற்றும் தியாகத்தை நினைவுகூர்ந்து கட்சியினர் மரியாதை செலுத்தினர்.



