சென்னை, செப்டம்பர் 15 –
சென்னை, காடுவெட்டி வீரராகவபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஊர் பக்த கோடிகளும் ஆன்மீகப் பெருமக்களும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல ஸ்ரீ செல்வ விநாயகர் அருள் பெற்று சென்றனர்.
வருகை தந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. ஆலய விழா குழுவினர் குமார், பாலாஜி மற்றும் ஜி. மாதவன் குருக்கள் சிறப்பாக கும்பாபிஷேகத்தினை நடத்தினர்.



