மார்த்தாண்டம், ஆக. 25 –
நித்திரவிளை பொன்னுரிக்கி வீட்டை சேர்ந்தவர் தங்கப்பன் மனைவி லீலாபாய் (77). இவர் நேற்று மாலை நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் பயணம் செய்துள்ளார். பின்னர் களியக்காவிளையில் வந்து இறங்கிய போது தனது கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


