மார்த்தாண்டம், ஜூலை 5 –
மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களை வறுமை கோட்டுக்கு கீழ் வகைப்படுத்தி குடும்பத்துக்கு மாதம் 35 கிலோ அரிசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி குழித்துறையில் உள்ள விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடந்த போராட்டத்தில் சங்கத்தின் தலைவர் ஜெயானந்த் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வில்சன், பொருளாளர் புரோஸ் கான் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.