வேலூர், ஜுன் 30 –
வேலூர் மாவட்டம் ரோட்டரி கிளப் ஆஃப் வேலூர் அக்கார்டு 2025 -2026 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக ரோட்டரி வி.எஸ்.ஆர். ஜெய் ஹரி கிருஷ்ணன் பதவி ஏற்பு நிகழ்ச்சி தொரப்பாடி AKM மஹாலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்கள் 2025-2026ம் ஆண்டு ரோட்டரி மாவட்ட ஆளுநர் சுரேஷ், முன்னாள் ஆளுநர் ரோட்டரி ஜே.கே.என் பழனி, ஸ்ரீ நாராயணி குழுமத்தின் இயக்குனர் மற்றும் டிரஸ்டி ரோட்டரி பேராசிரியர் பாலாஜி, காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் பச்சையப்பன் பிரபு, 2027-2028 ரோட்டரி மாவட்ட ஆளுநர் டாக்டர் சிவகுமார் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி துவக்கி வைத்தனர். உடன் ரோட்டரி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். புதிய தலைவராக பதவி ஏற்று கொண்ட ரோட்டரி வி.எஸ்.ஆர். ஜெய் ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கு ரோட்டரி கிளப் ஆஃப் வேலூர் அக்கார்டு நிர்வாகிகள் நினைவுப் பரிசுகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.