கன்னியாகுமரி, செப். 15 –
பேரறிஞர் அண்ணா 117 வது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில் அமைந்திருக்கும் அவரது திருவுருவ சிலைக்கு திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: அண்ணா தமிழகத்தின் சிந்தனை போக்கை, அரசியலை மாற்றி அமைத்த ஆளுமையாக திகழ்ந்தார். அவருடைய கருத்துகளின் வழி ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் தற்போதைய ஆட்சியே பேரறிஞர் அண்ணாவை போற்றக்கூடிய ஆட்சியாக உள்ளது.
த.வெ.க தலைவர் விஜய், தொடர்ந்து திமுக அரசு மீது விமர்சனம் வைப்பது தொடர்பான கேட்ட கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, தமிழகத்தில் யார் அரசியலுக்கு வந்தாலும் திராவிட முன்னேற்ற கழகத்தை பற்றி பேசினால் தான் அவர்களுக்கு அடையாளம் கிடைக்கும் என்பது தெளிவான ஒன்று. எப்போதும் எங்களை தான் விமர்சிப்பார்கள் என த.வெ.க தலைவர் விஜய் குறித்து பதில் அளித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



