மயிலாடுதுறை, ஜூலை 16 –
மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை புரிந்துள்ளார். நேற்று ரோடு ஷோ நடத்திய முதலமைச்சர் மயிலாடுதுறை நகர அலுவலகத்தில் முன்னாள் மு. கருணாநிதியின் முழு உருவ வெங்கல சிலையை திறந்து வைத்தார். இன்று இரண்டாவது நாளாக ஏவிசி கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். முன்னதாக குத்தாலம் ஒன்றியம் வழுவூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களின் முழு வெங்கல சிலையை திறந்து வைத்தார்.
இதற்காக வழுவூருக்கு வேனில் சென்ற முதலமைச்சருக்கு சாலையின் இருமருங்கிலும் பொதுமக்கள் உற்சாகமாக கையசைத்து வரவேற்பு தெரிவித்தனர். சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் K.N. நேரு, மெய்ய நாதன், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிரபாகரன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.