தென்காசி, ஜூலை 11 –
தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் மாவீரன் அழகுமுத்துக்கோன் 268 வது ஜெயந்தியை முன்னிட்டு தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் கீழப்புலியூரில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், நகர பொருளாளர் ஈஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.