சேலம், ஜூலை 4 –
வைஸ்ய முன்னேற்ற பேரவை சார்பில் தமிழகத்தினுடைய மறைந்த முன்னாள் ஆளுநர் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கே. ரோசையா அவர்களின் 92-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சேலம் கடை வீதி பகுதியிலே அவர் திருவுருவ படத்திற்கு மாநில தலைவர் நாகா ஆர். அரவிந்தன் தலைமையில் மாலை அணிவித்து 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் டாக்டர் முரளி, கேசவன், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.