கிருஷ்ணகிரி, ஜுன் 30 –
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் மத்தூர் ஒன்றியம் மலையாண்டஹள்ளி கிராமத்தில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம், ஒன்றிய கழக செயலாளர் குண. வசந்தரசு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் லயோலா ராஜசேகர், இளம் கழக பேச்சாளர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு திமுக அரசின் நான்காண்டு சாதனையை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜி. உதய சூரியன் வரவேற்புரை ஆற்றினார். பொதுக்குழு உறுப்பினர் செந்தில், ஒன்றிய கழக செயலாளர்கள் நரசிம்மன், ரஜினி செல்வம், மூன்றாம்பட்டி குமரேசன், எக்கூர் டி. செல்வம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சங்கர், ஜீவானந்தம், அரிமா தனசேகரன், முன்னாள் ஊராட்சி செயலாளர் கமலநாதன் பால் மூர்த்தி, மத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமரேசன், களர்பதி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கருணாநிதி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எஸ். சந்தோஷ்குமார், மதன்குமார், மணிகண்டன், ரகுநாதன், தயாநிதி, குறளரசன் உள்பட முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, கிளைச் செயலாளர் முருகேசன், கிளை பிரதிநிதி வேலுமணி ஆர்.வெங்கடேசன், கிளை பிரதிநிதி ராமகிருஷ்ணன், கிளை அவைத்தலைவர் கருப்பண்ணன், கிளை பொருளாளர் வேலுமணி, கிளை துணை செயலாளர் ஏ. சிவன் உள்பட ஏராளமான பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.