திருச்சி, மே 8 –
மணப்பாறை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த குழந்தை தெரசு (68) என்பவர், மணப்பாறை பேருந்து நிலைய நுழைவாயிலில் நடந்து சென்றபோது, பட்டுக்கோட்டையிலிருந்து பழனி செல்லும் அரசுப் பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் அவர் மீது ஏறி இறங்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மணப்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



