திருப்புவனம், ஜூலை 29 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் கொலை வழக்கு சம்பந்தமாக சிபிஐ 15-வது நாள் விசாரணைக்காக அஜித்குமார் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் ஏழு பேர் கொண்ட இரு குழுக்களாக இரு வாகனங்களில் வந்தனர். அதில் ஒரு வாகனத்தில் அஜித் குமாரின் தாயார் மாலதி மற்றும் சகோதரர் நவீன் குமாரை அழைத்துக் கொண்டு மதுரை ஆத்தி குளத்தில் உள்ள சிபிஐ ஆபீஸ்க்கு அழைத்துச் சென்றனர்.
மற்றொரு குழு திருப்புவனம் காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பு பகுதிக்கு சென்றனர். அங்கு தலைமை காவலர் கண்ணன் வீட்டிற்கு விசாரணைக்காக சென்றனர். அங்கு காவலர் கண்ணன் வீடு பூட்டி இருந்தது. அதனை தொடர்ந்து திருப்புவனம் காவல் நிலையத்திற்கு வந்த சிபிஐ இது சம்பந்தமாக விசாரணை செய்து விட்டு அதிகாரிகள் மதுரை நோக்கி புறப்பட்டனர்.