கிருஷ்ணகிரி, செப் 08 –
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் பாரத கோவில் வளாகத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட டைல்ஸ் மற்றும் மார்பிள் சங்க பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. இவ்விழா சேலம் மண்டல துணைத் தலைவர் சபரீசன் தலைமையில் கௌரவத் தலைவர் தங்கவேல், தலைவர் கார்த்திகேயன், துணைத் தலைவர் மகாதேவன், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் செந்தில் குமார், துணை செயலாளர் தங்கராஜ், இணைச்செயலாளர் மாதேஷ், துணை பொருளாளர் முருகேசன், சங்க காப்பாளர் மாதேஸ்வரன், செய்தி தொடர்பாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலையில் இளைஞரணி சங்க பொறுப்பாளர்கள் தலைவர் முருகன், துணைத் தலைவர் பெரியசாமி, செயலாளர் சக்திவேல், பொருளாளர் வேலன், துணை செயலாளர் சுரேஷ் பாபு, துணை பொருளாளர் தமிழரசு, இணை செயலாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர்.
முன்னதாக இவ்விழாவில் டைல்ஸ் தொழிற் சங்க பொறுப்பாளர்களுக்கு பதவி வழங்குதல், சிறந்த கூலித் தொழிலாளர்களுக்கு கேடயம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. ஊர் முக்கியஸ்தர்களுக்கு ஊர் மரியாதை செலுத்தப்பட்டது.
மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பேனா, பென்சில், ரப்பர், ஸ்கெட்ச் ஆகிய எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் நெப்போலியன், மாநில பொறுப்பாளர் கார்த்திக், சீனிவாசன், பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு, மாவட்டத் துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட பொதுச் செயலாளர் எம்.ஆர். ராஜேந்திரன், தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் முரளி விஜய் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து கேடயம் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் விழா ஒருங்கிணைப்பாளர்கள் பச்சையப்பன், துரை, மணிகண்டன், ரஞ்சித், உதயகுமார், சந்திரன், அருண்குமார், முனிரத்தினம், கந்தசாமி, பெரியசாமி, மாதயன், நிர்மல், குமார், முருகன், வினோத், குமார், மணிகண்டன், முரளி, முருகன், பிரபு, யோகதாஸ், சிவகுமார், அருள்முருகன், சதாசிவம் உள்ளிட்ட ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.
இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பழனி, சக்கரவர்த்தி, முன்னாள் கவுன்சிலர் சாம்பசிவம், திமுக மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் சண்முகம், ஊராட்சி செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.



