மார்த்தாண்டம், ஆக. 3 –
பொன்மனை பேரூராட்சிக்கு உட்பட்ட அமராவதி காலை குடியிருப்பு பகுதியில் தனியார் நிலத்தில் ரப்பர் சீட் சுமோக் ஹவுஸ் என்று கட்டுமானம் செய்யப்பட்டு சுடுகாடாக மாற்றி உள்ளனர். இந்த சுடுகாட்டில் குலசேகரம் உட்பட்ட வெளியூர் பகுதிகளை சேர்ந்த பல பகுதிகளை சேர்ந்த இறந்தவர்களின் உடலை எரியூட்டுவதால் மக்கள் குடியிருப்புகள் அடங்கிய பகுதியில் அமைந்துள்ள சுடுகாடை அகற்ற வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று ஒருவர் இறந்து அந்த பகுதியில் உடல் தகனம் செய்ய கொண்டு வருவதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த பகுதி மக்கள் அந்த தனியார் சுடுகாடு செல்லும் சாலையில் போராட்டம் நடத்த குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இறந்த நபரின் வீட்டில் சென்று உடலை அந்த பகுதியில் எரியூட்ட கூடாது என்று ஊர் மக்கள் கூறியதால், அவரை வேறு இடத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. உடனே பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த குடியிருப்பு பகுதியில் இருக்கும் சுடுகாட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.



