பூதப்பாண்டி ஜுலை 14 –
பூதப்பாண்டியை அடுத்துள்ள வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அரிகர புத்திரன் என்ற மோகன் (67). இவர் முன்னாள் தோவாளை ஒன்றிய திமுக செயலாளராவார். இவரது மனைவி உமா (57). இவர்கள் இருவரும் நேற்று காலையில் இறச்சகுளத்தில் உள்ள ஒரு நிச்சயதாம்பூல நிகழ்ச்சி சென்று விட்டு வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது செக்கடி ஊர் அருகே நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளன.
அதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அவரது மனைவி உமா லேசான காயங்களுடன் நாகர்கோவிலிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.