புதுக்கோட்டை, ஜூலை 14 –
புதுக்கோட்டை திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் யோ. ஜெயராஜ், மாந்தாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆர். சரவணன் ஆகியோருக்கு
அண்ணா தலைமைத்துவ விருதான தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்றிதழ், கேடயம் ஆகியவற்றை அமைச்சர் கே.என். நேரு, கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி ஆகியோர் வழங்கி பாராட்டினர்.
அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித்திட்ட அலுவலர் செந்தில், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெள்ளைச்சாமி, மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம்.சி. சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளர் கி. வேலுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.