தூத்துக்குடி, ஜூலை 25 –
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டை அருகே உள்ள வாகைகுளம் தனியார் திருமண மண்டபத்தில் முடிவைத்தானேந்தல் மற்றும் கட்டாலங்குளம் கிராம ஊராட்சி மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் சென்று ஆய்வு செய்தார். முகாமில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து, முகாமில் மொத்த 1151 மனு பெறப்பட்டன. அதிகமான மனுக்கள் வருவாய் சம்பந்தப்பட்ட மனுக்கள் 866 மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மற்ற துறை சார்ந்த மனுக்களையும் பெறப்பட்டன. இம்முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, மின் இணைப்பு தொடர்பான பெயர் திருத்தம் உள்ளிட்ட ஆணைகளையும் அவர் வழங்கினார்.
இந்த முகாமில் தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மா. ஐகோர்ட் ராஜா, ஆ. பானு, திமுக ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஆர். சுப்பிரமணியன், கே.கே.ஆர். ஜெயக்கொடி, தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பா. ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் அபிராமி ஆறுமுகம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் எம். அருண், முன்னாள் அமைப்பாளர் ரா.ஆ. பரியேறும் பெருமாள், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆர்.ஜெ. வசந்த், சிறுபான்மை அணி அமைப்பாளர் ஸ்டீபன், மாவட்ட பிரதிநிதி மாரிச்செல்வம் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.